தற்போதைய நிலையில் கொரோனா வைரசும் உலகநாடுகளும்




இன்று உலகம் முழுவதும் அனைவராலும் பேசப்பட்டும் பகிரப்பட்டும் வரும் ஒரே செய்தி கொரோனா வைரஸ். உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனவிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் பொதுஇடங்களில் கிருமிநாசினிகள் தெளிக்கும் பணி நடந்துவருகிறது. இணையத்தில் கொரோனபியிட்டர்ஸ் என்ற அடைமொழியில் அதில் பணிபுரியும் ஊழியர்களை பாராட்டி வருகின்றனர் இணையவாசிகள். கொரோனா வைரஸ் பாதிப்பை முதலில் எதிர்கொண்ட சீனா தற்போது அதன் தாக்கத்தில் இருந்து மீண்டுவரும் நிலையில் மற்றநாடுகளில் அதன் தாக்கம் அதிகரித்துக்கொண்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இத்தாலியில் 368 பேரும் ஈரானில் 129பேரும் ஒரே நாளில் இறந்துள்ளனர்.
 தற்போது வடமேற்கு சீனாவில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் முகமூடி அணிந்து பள்ளிக்கு செல்கின்றனர்.பெரும்பாலானநாடுகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அழிக்கப்பட்டும் மக்கள் அதிகம் கூடும் திரைஅரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டும் பொதுஇடங்களில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனி அறையில் வைத்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments