நகரங்களுக்கு பொதுமுடக்கம் 5.0? சற்றுமுன் வெளியான தகவல்கள்!




இந்தியாவின் 13 நகரங்களில் கண்டிப்பாக அடுத்தகட்ட பொதுமுடக்கம் இரண்டு வாரங்களுக்கு செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நான்காம் கட்ட ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதி - நாளையுடன் முடிவடைகிறது. அதனால் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் 13 நகரங்களில் கண்டிப்பாக அடுத்தகட்ட பொதுமுடக்கத்தை இரண்டு வாரங்களுக்கு செயல்படுத்த அரசு தயாராக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • இந்த காலகட்டத்தில் மால்கள், தியேட்டர்கள், வழிபாட்டுத்தலங்கள், வெளிநாட்டு விமான சேவை போன்றவற்றுக்கான தடை தொடரும் என்று தெரிகிறது *மாவட்டங்கள் இடையேயான பொதுப்போக்குவரத்து ரயில் சேவை உள்ளிட்டவற்றில் தளர்வுகள் இருக்கக்கூடும்
  • கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படக் கூடிய சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட 30 மாநகராட்சிகளில் தளர்வுகள் அதிகம் இருக்காது என்று கூறப்படுகிறது
  • அதேநேரம் முன்பைவிட மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது


Post a Comment

0 Comments