கேரளாவில் பழத்தில் மறைத்து வைத்திருந்த பட்டாசு வெடித்து கருவுற்ற யானை உயிரிழப்பு




கேரளாவின் மலப்புரம் வனத்தையொட்டிய பகுதியில் ஆற்றை ஒட்டிய குடியிருப்புப்பகுதிக்கு வந்த கர்ப்பிணி யானையை, பட்டாசுகள் நிரப்பிய பைன் ஆப்பிள் பழத்தை சாப்பிட அளித்தனர்.

மனிதர்களின் குரூர புத்தியை அறியாத யானை, பழத்திற்குள் இருந்த பட்டாசுகள் வெடித்ததில், யானையின் வாய் கிழிந்து, அந்த ஆற்றிலேயே நின்றவாறு மரணமடைந்தது.



யானை கர்ப்பமாக இருந்ததாகவும், இன்னும் 18 அல்லது 20 மாதங்களுக்குள் குட்டியை ஈனும் நிலையில் இருந்தது.

சக்திவாய்ந்த பட்டாசுகள், பழத்தினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்தால், யானையின் வாய், நாக்கு உள்ளிட்ட பாகங்கள் பலத்த சேதமடைந்தன. யானை அந்த வலியோடவே மற்ற பகுதிகளுக்கு சென்று வந்துள்ளது. நாக்கு, வாயில் ஏற்பட்ட காயங்களால் அதனால் எதையும் சாப்பிட முடியவில்லை.
மக்கள் யாருக்கும் அந்த யானையால் இதுவரை எந்த தீங்கும் நிகழாத நிலையில்,
அது அந்த கிராமத்தையே சுற்றி சுற்றி வந்துள்ளது. அந்த யானை, மிகுந்த சாது என்று அரவ் குறிப்பிட்டுள்ளார்.



இறுதியில் அந்த யானை வெள்ளியார் ஆற்றில் இறங்கி நின்றது, அதன் வாய், நாக்கு பகுதியில் தண்ணீர் படுமாறு செய்தது, அதனால் வலியை தாங்க இயலாமல், கடுமையாக பாதிக்கப்பட்டது.

சுரேந்திரன், நீலகந்தன் என்ற இரு கும்கி யானைகளை அழைத்துசென்று அந்த யானையை மீட்கும் பணிகளில் ஈடுபட்டோம். ஆனால், அதற்கு நாம் இறந்துவிடுவோம் என்று தெரிந்திருக்கும்போல, 
27ம் தேதி மாலை 4 மணிக்கு யானை, தண்ணீரில் நின்றவாறே இறந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்...

Post a Comment

0 Comments